Sunday, 26 August 2012

நுகர்வோர் பாதுகாப்பு


                 நுகர்வோர் பாதுகாப்பு

மனிதா! மனிதா!
     விழித்துவிடு – உன்
மனதிற்க்கு இதனை
          உணர்த்திவிடு

நுகர்வோர் நீ என
        உணர்ந்துவிடு!
நித்தம் நீயதை
        மதித்துவிடு!

அட்டையில் விலையை
        பொறித்துவிட்டு?
அதர்க்குமேல் காசினை
        வாங்கினாள்?

அமைதியாய் புறப்பட்டு
        செல்லாதே?
அக்கினியை மெதுவாய்
        வளர்க்காதே?

தீயினை மெதுவாய்
       அனைத்துவிடு!
தினந்தோரும் அதனை-நீ
       எதிர்த்துவிடு?

தேதியை நீயும்
         பார்துவிடு-உன்
தேகத்தை நலமாய்
         காத்துவிடு!

தேதியை அட்டையில்
          போடவிடில்!
அதை தேங்கிகிடக்க
           செய்துவிடு!

அனைத்தையும் பார்த்து
            வாங்கிவிடு!
ஆனந்த வாழ்க்கை
           வாழ்ந்துவிடு!


மக்களுக்கு எல்லாம்
           உணர்த்திவிடு!            
அவர்களின் மனதினைத்தட்டி
           எழுப்பிவிடு!

நுதன  ஊழலை
         தடுத்துவிடு!
 நுகர்வோர் பங்கினை
         உணர்த்திவிடு!
         

Tuesday, 10 July 2012

தமிழ்

தமிழ் என்னும்
முக்கனிகளை தரவல்ல
மிகப்பெரிய மரத்தின்
முதல் கிளையில் நின்று...!
"தமிழ் வளர்க்க போகிறேன்
தமிழ் வளர்க்க போகிறேன்"
என வீனாய்
கரம் உயர்த்தும்
முட்டால் மனிதா....?
உன் சிறம் உயர்த்தி
மேலே சென்று
முக்கனிகளை ருசித்து
உன் தரம்
உயர்த்துவாயாக....!

Sunday, 8 July 2012

தமிழ் (tamil)


வளர்த்து விடுவதர்க்கு
தமிழ் ஒன்றும்
சிறு செடியல்ல
வளர்ந்து பரவி
ஆண்டுகள் ஆயிரம்
இளமையுடன்
நிற்கும்
மிகப்பெரிய
ஆலமரம்.......

தமிழ் மொழியின் மூத்த குழந்தைகள் (tamil)


தமிழ் மொழியை
வளர்த்து விட்டவர்கள்
அல்ல இவர்கள்
தமிழ் மொழியால்
வளர்க்கப் பட்டவர்கள்